உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உதவித்தொகை விண்ணப்ப கட்டணம் - ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

Published On 2022-01-29 05:05 GMT   |   Update On 2022-01-29 05:05 GMT
தேர்வு கட்டண விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலர்களிடம் பிப்ரவரி 9-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் .
திருப்பூர்:

மார்ச் மாதம் நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தொகை திட்ட தேர்விற்கு விண்ணப்பித்த 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in எனும் இணையதளம் மூலமாக பிப்ரவரி 5 வரை பதிவேற்றம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்:

தேர்வு கட்டணம் ஒரு தேர்வருக்கு 50 ரூபாய் வீதம், www. karuvoolam.tn.gov.in இணையதளத்தில் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது தேசிய திறனாய்வு தேர்வினை போலவே, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தொலைத்திட்ட தேர்வுக்கும், படிப்புதவிதொகை திட்டத்தேர்வுக்கும் டி.ஜி.இ., போர்ட்டலில் ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் போது தேர்வுக் கட்டணத்தை செலுத்த வழிசெய்யப்பட்டுள்ளது.

பதிவேற்றம் முடிந்தவுடன் தேர்வு கட்டண விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலர்களிடம் பிப்ரவரி 9-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News