உள்ளூர் செய்திகள்
மரக்காணம் அருகே தர்பூசணி அறுவடை செய்த காட்சி.

மரக்காணம் அருகே தர்பூசணி அறுவடை தீவிரம்

Published On 2022-01-29 05:02 GMT   |   Update On 2022-01-29 05:02 GMT
நடுக்குப்பம், ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் பயிர் செய்த விவசாயிகள் தர்பூசணி அறுவடை நடந்தது. தர்பூசணியை லாரி மூலம் பெங்களூர், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தனர்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர், நடுக்குப்பம் ஆகிய கிராமங்களில் தர்பூசணி அறுவடை பணி தொடங்கியது. மரக்காணம் பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிர் செய்துள்ளனர்.

இப்போது விளைந்து எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஏக்கருக்கு 10 டன் வரை விளைந்துள்ளது. தற்போது 72 நாட்கள் ஆகிய நிலையில் அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதை அறிந்த வெளிமாநில வியாபாரிகள் மரக்காணம் பகுதியான சிறுவாடி, முருக்கேறி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர்.

தர்பூசணி ஒரு டன் விலை ரூ. 15 ஆயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இன்று நடுக்குப்பம், ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் பயிர் செய்த விவசாயிகள் தர்பூசணி அறுவடை நடந்தது. தர்பூசணியை லாரி மூலம் பெங்களூர், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News