உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புதியம்புத்தூர் தனியார் மின்உற்பத்தி நிறுவனத்தில் தாமிரகம்பிகள் திருட்டு- 5 பேர் கைது

Published On 2022-01-28 09:17 GMT   |   Update On 2022-01-28 09:17 GMT
புதியம்புத்தூர் அருகே உள்ள கீழவேலாயுதபுரத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் ரூ.1.82 லட்சம் மதிப்பில் தாமிரகம்பிகள் திருட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
புதியம்புத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள கீழவேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. தற்போது அந்நிறுவனம் செயல்படவில்லை.

இந்நிலையில் அந்நிறுவனத்தில் நேற்று அதிகாலை லோடு வேனில் 5 பேர் தாமிரக்கம்பிகளை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவலர்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது தாமிர கம்பிகளுடன் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து அந்நிறுவனத்தின் என்ஜினீயர் சாந்தகுமார், புதியம்புத்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லோடு வேனில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் கீழ வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த சஞ்சய்சிங் என்ற மணி (34), பொன்ராஜ் (31), அரசடி பனையூர் கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி (20), வேப்பலோடையைச் சேர்ந்த செல்லத்துரை (29), தூத்துக்குடி ஆ.சண்முகபுரத்தை சேர்ந்த முருகேசன் (47) ஆகியோர் என்பதும், தனியார் நிறுவனத்தில் மின்கம்பிகளை திருடியதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.80 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து தாமிர கம்பிகள் மற்றும் லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News