உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா புதிய பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது

Published On 2022-01-27 09:17 GMT   |   Update On 2022-01-27 09:17 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று கொரோனா புதிய பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. 3-வது அலையின் புதிய உச்சமாக ஒருநாள் பாதிப்பு 800-ஐ கடந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொற்றின் வேகம் படிப்படி யாக குறைய தொடங்கி உள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 612 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாதிரி கள் பரிசோதிக்கப்பட்டது. இதில் புதிதாக 296 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 300-க்கும் கீழ் சென்றதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.  இன்று அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 119 பேரும், வள்ளியூரில் 53 பேரும், ராதாபுரத்தில் 43 பேரும், நாங்குநேரியில் 37 பேரும் பாதிக்கப்பட் டுள்ளனர்.

இதேபோல் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளையங் கோட்டை, பாப்பாக்குடி உள் ளிட்ட பகுதிகளிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர் களுக்கு லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அறிவுறுத்தப் படுகிறார்கள்.

ஒரு சிலருக்கு மட்டுமே தீவிர பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். தொற்றின் வேகத்தை மேலும் குறைக்க மாவட்ட மாநக ராட்சி சார்பில் தொ டர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பு நடவடிக்கையாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும், பொது இடங்களில் முககவசம் அணிந்து செல்லவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது
Tags:    

Similar News