உள்ளூர் செய்திகள்
.

எடப்பாடி பகுதியில் 12 போலீசாருக்கு கொரோனா

Update: 2022-01-27 07:46 GMT
எடப்பாடி பகுதி போலீஸ் நிலையங்களில் 12 போலீசார் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.
எடப்பாடி:

சேலம் மாவட்டம்  எடப்பாடி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனர்.

 இதில் கொங்கணாபுரம்  போலீஸ் நிலைய  சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, தலைமை காவலர்கள் பெருமாள்,  ரமேஷ், ராமகிருஷ்ணன் மற்றும் பெண் காவலர்கள் உமா, உஷா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து பாதிப்பிற்குள்ளான போலீசார் தனிமை படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து எடப்பாடி சுற்றுவட்டார பகுதி போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் 12 போலீசாருக்கு தொடர்ச்சியாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது சக  போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் நிலையங்கள் முழுதும் கிருமி நாசினி தெளித்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News