ஜன.28, 29 ஆகிய தேதிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சிறப்பு பிரிவினருக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெறுகிறது
பதிவு: ஜனவரி 27, 2022 08:06 IST
மாற்றம்: ஜனவரி 27, 2022 08:08 IST
எம்பிபிஎஸ் மாணவர்கள்
சென்னை:
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று நடைபெறவுள்ளது
தமிழகத்தில் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
இரண்டு அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதைத் தவிர சுயநிதி கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்களும், 635 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.
இந்த கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு, 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த டிசம்பா் 19-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்றது. அதன்பின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை ஓமந்தூராாா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
இதை தொடர்ந்து ஜன.28, 29 ஆகிய தேதிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
இதன்பின் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 30-ந் தேதி முதல் www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் மூலம் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்... ரயில்வே தேர்வுகள் நிறுத்தி வைப்பு
Related Tags :