தஞ்சையில் பழுதடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அறிவித்துள்ளது.
தஞ்சையில் சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்
பதிவு: ஜனவரி 26, 2022 15:17 IST
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநகரக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதற்கு தஞ்சை மாநகர செயலாளர் எஸ்.எம்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.மாநகர துனை செயலாளர் சூரிரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தஞ்சை- நாஞ்சிக்கோட்டை விளார் பிரதான சாலை சேதமடைந்து இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
உடனடியாக சீரமைத்து புதிய சாலை போட வேண்டும், இல்லையென்றால் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆர்.கே.ரவிசந்திரன் ஒன்றிய குழு பொருப்பாளர் டேவிட், மருத்துவர் பழநிசெல்வக்குமார், கணபதி, பெட்ரிக் ஜெயக்குமார், வழக்கறிஞர் வீரமணி, ராஜரெத்தினம், மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :