நாட்டறம்பள்ளி அருகே நிலத்தகராறில் தம்பியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
நிலத்தகராறில் தம்பியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது
பதிவு: ஜனவரி 26, 2022 15:15 IST
கோப்புப்படம்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி இவரது மகன்கள் ராஜா (வயது 50), காந்தி (வயது 45) இவர்கள் இருவருக்கும் இடையே நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியால் காந்தியை வெட்டினார். இதில் படுகாயமடைந்த காந்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்.இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தம்பியை கத்தியால் வெட்டிய ராஜாவை கைது செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.