உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் - வருகிற 29ந்தேதி நடக்கிறது

Published On 2022-01-26 04:37 GMT   |   Update On 2022-01-26 04:37 GMT
தேசியமயமாக்கப்பட்ட தனியார் வங்கிகள் பங்கேற்று மாணவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் 3 இடங்களில், 29-ந் தேதி நடக்கிறது.

திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம், பொங்கலூர் பகுதி மாணவர்களுக்கு திருப்பூர் நஞ்சப்பா ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, தாராபுரம், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர், குண்டடம் பகுதி மாணவர்களுக்கு தாராபுரம் மகாராணி கல்லூரி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிக்கு உடுமலை வட்டார சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது. 

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விண்ணப்ப நகல் மற்றும் ஆவண நகல்களுடன் பங்கேற்கலாம்.

மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல், கல்விக்கட்டண விவரம், 10, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்ட படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டாதாரியாக இருக்கும்பட்சத்தில், அதற்கான சான்றிதழ்; கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட மாணவர் சேர்க்கை உத்தரவு போன்றவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம்.

தேசியமயமாக்கப்பட்ட தனியார் வங்கிகள் பங்கேற்று மாணவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை 0421 2971185 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News