உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மேலும் 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2022-01-25 14:24 GMT
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 30,215 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 30,055 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,055 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 94 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்புக்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2.11 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 6,241 ஆக உள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 6,296 ஆக இருந்த பாதிப்பு 6,241 ஆக குறைந்துள்ளது.

Tags:    

Similar News