உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கல்லூரி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை

Update: 2022-01-25 10:56 GMT
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்தனர்.
மதுரை

மதுரை கே.புதூர் கணபதி தெருவைச் சேர்ந்த முருகேசன் மகள் கிருத்திகா (வயது 18). இவர் கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் பியூட்டிசியன் பட்டய படிப்பு படித்து வந்தார். இவருக்கு படிப்பில் நாட்டம் இல்லை. எனவே தாய் நாகேஸ்வரி ஒழுங்காக படிக்குமாறு கண்டித்துள்ளார். 

இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கிருத்திகா சம்பவத்தன்று  வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மதுரை திருநகரை அடுத்த சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜபிரகாஷ் (45). இவர் தமிழக அரசு போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முத்துமாரி. 

ராஜபிரகாசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் குணம் ஆகவில்லை. 

இதனால் வெறுப்படைந்த ராஜபிரகாஷ் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை பி.பி.குளம் முல்லை நகரை சேர்ந்தவர் வீரபத்திரன் (60). இவரது மனைவி கருப்பாயி உள்ளார். வீரபத்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தி அடைந்த வீரபத்திரன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை சுப்பிரமணியபுரம் ஹரிஜன காலனியை சேர்ந்தவர் திருப்பதி (27), மேள வாத்திய கலைஞர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. 

திருப்பதிக்கு குடிப்பழக்கம் உண்டாம். இந்த நிலையில் திருப்பதியின் நண்பர் ராமச்சந்திரன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மரணம் அடைந்தார். இதனால் விரக்தியில் இருந்த திருப்பதி சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Tags:    

Similar News