உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரிக்கை

Published On 2022-01-25 10:21 GMT   |   Update On 2022-01-25 10:21 GMT
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என சீனிவாச சித்தர், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி:
 
தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீமஹா பிரத்தியங்கிரா தேவி -காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான மாணவி லாவண்யா சமூகத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். 

அவரது குடும்பத்தின் ஏழ்மையை சாதகமாக்கி கொண்டு அவரை சிலர் மத மதத்திற்கு வற்புறுத்தி வந்துள்ளனர். 

இதனால் மனமுடைந்த மாணவி லாவண்யா வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்த விபரங்களையும் தெளிவாக குறிப்பிட்டு தனது உயிரை நீத்துள்ளது மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. 

அனைத்து மத மக்களும் ஒற்றமையாக, சகோதரர்களாக வாழ்ந்து வரும் தமிழகத்தில், இந்த துயர சம்பவம் நடத்துள்ளது தாங்க முடியாத துயரை தருகிறது.

எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியின் தற்கொலை விவகாரத்தில் பாரபட்சமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் சரியான நீதி கிடைத்திட சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டணை வழங்கிடவேண்டும். 

மாணவி குடும்பத்திற்கு நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News