உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

மொழிப்போர் தியாகிகளுக்கு ஓ.பி.எஸ். மரியாதை

Published On 2022-01-25 09:58 GMT   |   Update On 2022-01-25 09:58 GMT
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலசொக்கநாதபுரம்:

1965-ம் ஆண்டு மத்திய அரசு ஹிந்தியை கட்டாய மொழியாக அறிவித்தது. இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் பின்னர் மத்திய அரசு ஹிந்தி கட்டாய மொழிச் சட்டத்தில் தளர்வு கொண்டு வந்தது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி வீர வணக்க நாளாக அறிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

Similar News