உள்ளூர் செய்திகள்
.

கஞ்சா வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா

Update: 2022-01-25 09:49 GMT
சேலத்தில் கஞ்சா வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்னதானப்பட்டி:

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூர் வீராணம் மேல்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 20).  கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் காலை  தாதகாப்பட்டி கேட் மூணாங்கரடு பகுதியில் தனது நண்பருடன் சேர்ந்து நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அவரை  கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது  அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் அவருக்கு  தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று முதல்  சேலம் அரசு மருத்துவமனையில்  சுரேஷ் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு  அவருக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News