சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென்று தற்கொலை முயறிசியில் ஈடுபட்டார்.
சேலத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
பதிவு: ஜனவரி 25, 2022 15:14 IST
.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை ரஷ்யா காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் கோபி (வயது 24). இவர் தனது தாயார் மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.
இவர் நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குபோட்டுக் கொண்டார், இதை பார்த்து அவரது தாயார் கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து தூக்கு கயிற்றில் இருந்து கோபியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு கோபி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் கோபி எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.