உள்ளூர் செய்திகள்
உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்ட காட்சி.

தென்காசியில் நூதன முறையில் திருடப்பட்ட ரூ.3.64 லட்சம் மீட்பு

Published On 2022-01-25 09:34 GMT   |   Update On 2022-01-25 09:34 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3.64 லட்சத்தை ஒருவர் நூதன முறையில் திருடினார். சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து பணத்தை மீட்டனர்.
தென்காசி:

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் சுந்தரவேல் ராஜஸ்தானில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் சுந்தரவேல் கடந்த 19.11.2021 அன்று அவரது தாயாருக்கு ரூ.1,69,000 எஸ்.பி.ஐ. யோனா செயலி மூலம் அனுப்பியுள்ளார். 

அனுப்பிய பணம் தொழில்நுட்ப கோளாறால் அவரது தாயாருக்கு சென்று அடையாத காரணத்தினால் சுந்தரவேல் ஆன்லைனில் எஸ்.பி.ஐ. வங்கியின் உதவி எண்ணை தேடி (960 967) என்று தவறான எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

எஸ்.பி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதுபோல் ஏமாற்றிய மோசடி நபர் சுந்தரவேலை (எனி டெஸ்க் அப்) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யக்கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ-.3.64 லட்சம் திருடி உள்ளார்.

இதுகுறித்து சுந்தரவேலின் மனைவி சுமதி தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் அறிவுரையின்படி இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கம் செய்து விசாரணை நடத்தி பணம் மீட்கப்பட்டது. 

கூடுதல்  போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் முன்னிலையில் சுமதியிடம் தகுந்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கி பணம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News