உள்ளூர் செய்திகள்
.

சேலம் மாவட்டத்தில் மிளகாய் வத்தல் கிலோ ரூ.210 ஆக உயர்ந்தது

Published On 2022-01-25 09:33 GMT   |   Update On 2022-01-25 09:33 GMT
சேலத்தில் மிளகாய் வத்தல் கிலோ ரூ.210 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர், ஏற்காடு, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம்,  தலைவாசல், தாரமங்கலம்,  உள்பட பல பகுதிகளில் தினசரி சந்தைகள் இயங்கி வருகின்றன.

இங்கு விற்பனைக்காக சேலம் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்தும் மிளகாய் வத்தல் குவிண்டால் அடிப்படையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
 
குறிப்பாக அதிக அளவில் மிளகாய் வத்தல் ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிளகாய் வத்தலை வியாபாரிகள் நேரடியாகவே  கொள்முதல் செய்து சாக்குமூட்டைகளில் வைத்து  லாரிகள், ரெயில்கள் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு  அனுப்பி வைக்கின்றனர். 

பின்னர்  இவற்றை கடை உரிமையாளர்கள் சில்லரை விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதில்  முதல் ரக மிளகாய் வத்தல்களில் ஒன்றான சிறிய அளவில் இருக்கும் வத்தல் விலை தற்போது உயர்ந்துள்ளது.  இந்த வத்தல் காரம் அதிகமாக இருக்கும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.170க்கு விற்ற இந்த வத்தல் தற்போது ரூ.220க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்குள் ரூ.50 விலை அதிகரித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அதிகபட்சமாக  கிலோ110 முதல்  120 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த  வத்தல்  விலை படிப்படியாக  உயர்ந்து கிலோ 220 ரூபாயாக இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News