உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு- கர்நாடக அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2022-01-24 04:47 GMT   |   Update On 2022-01-24 04:47 GMT
கர்நாடகா அரசு கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயக விரோத செயலாகும் என்று ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படியும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படியும் காவிரியில் கர்நாடக அரசு வழங்கும் தண்ணீரைக் கொண்டுதான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதை தடுக்க நினைப்பது தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

ஏற்கனவே கர்நாடக அரசும், காங்கிரசும் மேகதாதுவில் அணைக்கட்ட முனைப்பு காட்டி தமிழக மக்களை வஞ்சிக்கிறது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்கள் குடிநீருக்காக இந்த தண்ணீரையே நம்பி இருக்கிறார்கள். தற்பொழுது கர்நாடகா அரசு கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயக விரோத செயலாகும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிப்பதை கர்நாடக அரசு உடனே கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News