உள்ளூர் செய்திகள்
விஜி ராஜேந்திரன்

திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

Published On 2022-01-24 04:05 GMT   |   Update On 2022-01-24 04:05 GMT
திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வி.ஜி.ராஜேந்திரன். இவர் திருவள்ளூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் 2-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மேலும் இவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், வர்சித் என்ற மகனும், பிரியதர்சினி என்ற மகளும் உள்ளனர்.இவரது மகன், மகள் சென்னையில் வசித்து வருகின்றனர். திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா கல்லூரி வளாகத்தில் உள்ள வீட்டில் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் தன்னுடைய மனைவி இந்திராவுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அவரது மனைவிக்கும் இதேபோல் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டது. இதை அறிந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்கள். பரிசோதனை முடிவில் எம்.எல்.ஏ.வுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா கல்லூரி வளாகத்தில் உள்ள வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News