உள்ளூர் செய்திகள்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு மனதை தெம்பூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நோயாளிகளுக்கு மண்பானை தண்ணீர், வாழை இலையில் சாப்பாடு

Published On 2022-01-23 09:38 GMT   |   Update On 2022-01-23 09:38 GMT
கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு மண்பானை தண்ணீர், வாழை இலையில் சாப்பாடு மற்றும் நடைபயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே அக்கரகாரத்தில் 100 படுக்கை வசதி கொண்ட சித்த கொரோனா சிகிச்சை மையத்தில் தற்போது 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள அக்ரஹாரத்தில் உள்ள பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சித்த கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது வரை 14 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சித்த கொரோனா சிகிச்சை மையத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தங்க வதற்கு ஏதுவாக படுக்கை வசதிகள் சுத்தமான உணவு அடிப்படை வசதிகள் மற்றும் சுத்தமான குடிநீர் 24 மணி நேரம் நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றன.

மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரம் கண்காணித்து வருகின்றனர். 

மேலும் நோயாளிகளுக்கு நமது பாரம்பரிய முறையில் மண் பானையில் தண்ணீர் மண் பானையில் சமையல் வாழை இலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது மேலும் நிலவேம்பு கசாயம் தினசரி வழங்கப்படுகிறது.

இந்த கொரோனா சித்த சிகிச்சை மையத்தில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விக்ரம்குமார் கொரோனா நோயாளிகளுக்கு மனதை தெம்பூட்டும் வகையில் பேசினார்.

மேலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் வீட்டில் இருப்பது போல் உணர்கின்றனர். அனைவரும் தாய், தந்தை மகன் மகள்கள் போல் குடும்ப உறுப்பினர்களாகவே இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News