உள்ளூர் செய்திகள்
புதிதாக கட்டப்பட்டு வரும் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கட்டிடம்.

ரூ.110 கோடியில் கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலகம்

Published On 2022-01-23 09:35 GMT   |   Update On 2022-01-23 09:35 GMT
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலகத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டு அனைத்து துறை அலுவலகங்களும் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகின்றது. 

இந்த நிலையில் திருப்பத்தூர் நகரில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. 

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டடுமானப்பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

10.38 ஏக்கர் பரப்பளவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற துறை அலுவலகங்களுக்கான கட்டிடம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. 

இந்த கட்டிடமானது தரைதளம் மற்றும் 7 தளங்களையும் சேர்த்து மொத்தம் 2,94,565 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. 

இக்கட்டிடத்தில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறையினை சேர்த்து 25 துறை அலுவலகங்கள் செயல்பட ஏதுவாக கட்டப்பட்டு வருகிறது. 

இக்கட்டிடத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கம், அலுவலர்களுக்கான கூட்டரங்கம், மேல்தளங் களுக்கு செல்வதற்கு வசதியாக தேவையான படிகட்டுகள், மின்தூக்கிகள், மாற்று திறனாளிகளுக்கான சாய்தளம் மற்றும் தேவையான கழிவறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. 

இதர வசதிகளான பூங்கா மற்றும் புல்வெளி, கட்டிடத்தினை சுற்றிலும் சாலை, நடைபாதை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, முகப்பு அலங்கார வளைவு, அணுகுசாலை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

இப்பணிக்கு 18 மாதம் ஒப்பந்தகாலம் வழங்கப்பட்டு 17.07.2022-ல் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே 17.05.2022-ல் முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 400 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இக்கட்டுமான பணிகள் இதுவரை 80 சதவிகிதம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இக்கட்டட பணியில் பயன்படுத்தப்படுகிற கம்பிகள், தண்ணீர், எம்சாண்டு, சிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்கள் பரிசோதனை செய்து தரமாக கட்டபடுகிறதா என்பது குறித்து ஆய்வு கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் 3 பெரிய கூட்டரங்கம் 200 நபர்களுக்கு மேல் அமரும்வகையில் இருக்கை வசதி, குறைதீர்வு கூட்டரங்கம் 300 நபர்கள் அமருவகையில் இருக்கை வசதி, 3 சிறிய கூட்டரங்கங்களில் 150 அமரும்வகையில் இருக்கை வசதி, கழிவறை வசதிகள், செயற்கை நீரூற்றுடன் கூடிய பூங்கா மற்றும் புல்வெளி, கட்டடத்தினை சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை அமைக்கப்படவுள்ளது. 

இப்பணிகளை தரமாகவும் மே மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் எம்.எஸ்.ரவி, உதவி மின் பொறியாளர் அருண்காந்தி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Tags:    

Similar News