உள்ளூர் செய்திகள்
5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்

Published On 2022-01-23 09:04 GMT   |   Update On 2022-01-23 09:04 GMT
அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் புவி வெப்பமயமாதலை தடுக்க மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பொன்னேரி:

மீஞ்சூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு நேதாஜி மர வங்கி, சென்னை பசுமை இயக்கம் மற்றும் நந்தியம்பாக்கம் டாக்டர். அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் புவி வெப்பமயமாதலை தடுக்க மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

முதல் கட்டமாக 200 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் சேர்மன் ரவி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

Similar News