உள்ளூர் செய்திகள்
.

சேலம் மாவட்டத்தில் முககவசம் அணியாத 800 பேர் மீது வழக்கு

Published On 2022-01-23 08:30 GMT   |   Update On 2022-01-23 08:30 GMT
சேலம் மாவட்டத்தில் முக கவ்சம் அணியாத 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலம்:

தமிழகம் முழுவதும் கொரோனா 3 ம் அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 

மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இதனால சேலம் மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 2 நாளில் மட்டும் முக கவசம் கவசம் அணியாத 808 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டது. 

தொடர்ந்து முக கவசம் அணியாதவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News