உள்ளூர் செய்திகள்
பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

பரமத்திவேலூர் பகுதிகளில் போக்குவரத்து முடக்கம்

Published On 2022-01-23 08:20 GMT   |   Update On 2022-01-23 08:20 GMT
பரமத்திவேலூர் தாலுகா பகுதிகளில் முழு ஊரடங்கால் போக்குவரத்து முடங்கியது
பரமத்திவேலூர்:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக  முழு ஊரடங்கு கடைபிடிக்கபப்ட்டது. 

இதையொட்டி ஜேடர்பாளையம், சோளசிராமணி, மணியனூர், கந்தம்பாளையம், கபிலர்மலை, ஆனங்கூர் பிலிக்கல்பாளையம் பாண்டமங்கலம், பரமத்தி, பரமத்திவேலூர், ஓலப்பாளையம், பாலப் பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  பல்வேறு கடைகள் மூடப்பட்டிருந்தன. 

அதேபோல் பார்சல் சேவைகளுக்கு மட்டும் ஹோட்டல்கள் திறக்கப்பட்டு இருந்தன.அத்தியாவசிய தேவைக்கான பால்கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை திறந்திருந்தன. 

பேருந்துகள்ஓடாததால் பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.  சாலைகளில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், லாரிகள், கார்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. 

பொது முடக்கம் காரணமாக சாலைகளில் பொதுமக்களும் செல்லாததால் கடை வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. 

Tags:    

Similar News