உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் கடும் பனி மூட்டத்தால் வீடுகள் மறைந்து காணப்படும் காட்சி.

கடும் பனி மூட்டம்

Published On 2022-01-23 07:22 GMT   |   Update On 2022-01-23 07:22 GMT
தஞ்சையில் இன்று கடும்பனி மூட்டம் காணப்பட்டது.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் பனிக்காலமாகும். தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். ஆனால் தஞ்சையில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது.

அதிலும் இன்று அதிகாலை தஞ்சையில் வழக்கத்தை விட மூடுபனி தாக்கம் இருந்தது. அதாவது குடியிருப்புகளை சூழ்ந்து புகை மூட்டமாக காணப்பட்டது. 

தெருவில் நடந்து வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் இருந்தது.  குறிப்பாக மேம்பாலங்கள், சாலைகள், கோவில்கள் பனிமூட்டத்தால் மறைந்து காணப்பட்டது. அதிகளவில் காணப்பட்ட பனி மூட்டத்தை பலர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

முழு ஊரடங்கால் இன்று வாகனங்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும் ரெயில் சேவை இயங்கியது. இதனால் காலையில் தஞ்சைக்கு வந்த 
ரெயில்கள் அனைத்தும் விளக்குளை எரியவிட்டவாறு வந்தன. 

மேலும் பயணிகளுக்கு ரெயில் அருகே வந்த பிறகு தான் தெரிந்தது. அந்த அளவுக்கு மூடு பனி ரெயிலை மறைத்தது. 

காலை 8 மணி வரை பனியின் தாக்கம் இருந்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல புகை விலகி வெயில் அடிக்க தொடங்கியது.
Tags:    

Similar News