உள்ளூர் செய்திகள்
ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் எடப்பாடி பஸ் நிலையம்.

எடப்பாடி பகுதியில் முக்கிய வீதிகள் வெறிச்சோடின

Published On 2022-01-23 06:44 GMT   |   Update On 2022-01-23 06:44 GMT
முழு ஊரடங்கு காரணமாக எடப்பாடி பகுதியில் முக்கிய வீதிகள் வெறிச்சோடி கிடந்தது.
எடப்பாடி:

கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கினை அமல்படுத்தப்பட்ட நிலையில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

குறிப்பாக எடப்பாடி பஸ் நிலையம், உழவர் சந்தை, ராஜாஜி பூங்கா காய்கறி மார்க்கெட், நகராட்சி அங்காடி, சின்னக்கடை வீதி, பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

நகரின் ஒரு சில இடங்களில் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 

நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News