உள்ளூர் செய்திகள்
சோதனை சாவடி

கேரளாவில் அதிகரிக்கும் தொற்று- கோவை மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

Published On 2022-01-23 06:44 GMT   |   Update On 2022-01-23 06:44 GMT
மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனைமலை:

தமிழகத்தில் கொரேனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது. 

கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், கோபாலபுரம், ஆனைகட்டி, வேலந்தாவளம், செம்மணாம்பதி உள்ளிட்ட சோதனை சாவடிகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்க ளும் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். 

தற்போது கேரளாவில் அதிகரித்துள்ள தொற்று காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. 

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக் கூடிய வாகனங்களும், இங்கிருந்து கேரளாவிற்கு செல்லக் கூடிய வாகனங்களும் கடும் சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.சோதனை சாவடியில் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

 தமிழகம் வரும் அனைவரிடமும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத் தப்பட்டதற்கான சான்றிதழ்களை காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சான்றுகள் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சோதனை சாவடிகள் முழு ஊரடங்கான இன்று வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி, பால், மருந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, 
ஏற்கனவே தமிழக- கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. கேரளாவில் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். 

வாகனங்களில் வருபவர்களிடம் தடுப்பூசி சான்றிதழ், கொரோனா பரிசோதனைக்கான சான்றிதழ் இருக்கிறதா என சரிபார்க்கப்படுகிறது. இல்லையென்றால் அவர்கள் திருப்பி அனுப்பப் படுகின்றனர். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
Tags:    

Similar News