உள்ளூர் செய்திகள்
இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்.

இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்

Published On 2022-01-23 06:30 GMT   |   Update On 2022-01-23 06:30 GMT
திருக்காட்டுப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம் உள்ளது.
பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளியில் 1962-ம் ஆண்டிலிருந்து கிளை நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டிடங்களில் செயல்பட்டுவந்த இந்த நூலகம் 2000 ஆண்டில் இருந்து குடமுருட்டி ஆற்றின் கரை பகுதியில் உள்ள புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. 

6000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் , 50,000 புத்தகங்களை கொண்ட இந்த நூலகத்தில் தினந்தோறும் காலையும், மாலையும் ஏராளமான வாசகர்கள் வந்து நூல்களை வாசித்து பயனடைந்து வருகின்றனர். 

நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வுகளுக்கான நூல்களைப் படித்து ,நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுகளை வென்று பல்வேறு அரசுப் பதவிகளிலும் உள்ளனர்.

இத்தகைய பெருமை வாய்ந்த இந்த நூலக கட்டிடம் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 

நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.

அதைப்போலவே வாசகர்கள் உட்கார்ந்து படிக்கும் பகுதியிலும், நூலகர் அமர்ந்திருக்கும் இடத்தின் மேற்கூரையில் காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளன. 

கட்டிடத்தில் தெற்குப் பகுதி மூலையில் உள்ள சுவரில் பெரியவிரிசல் காணப்படுகிறது. இந்த விரிசலின் வழியாக விஷ ஜந்துக்கள் நூலகத்திற்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. கூரை வலுவிழந்து இருப்பதால் இடிந்து விழுந்தால் அரிதான பல நூல்கள் வீணாகும் சூழ்நிலை உள்ளது.

எனவே பாரம்பரியமான பெருமை மிக்க இந்த  நூலகத்தை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்து செயல்பட வைக்கவேண்டும். 

தற்போது உள்ள கட்டிடத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என்று நூலக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

மேலும் தற்போது உள்ள கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள காலியிடத்தில் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News