உள்ளூர் செய்திகள்
நாமக்கல் பிரதான சாலை வெறிச்சோடி காணப்பட்ட காட்சி.

ஞாயிறு முழு ஊரடங்கால் நாமக்கல்லில் வெறிச்சோடிய சாலைகள்

Published On 2022-01-23 06:25 GMT   |   Update On 2022-01-23 06:25 GMT
நாமக்கல்லில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் அனைத்தும் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.
நாமக்கல்:

கொரோனா முழு ஊரடங்கால் நாமக்கல் நகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று 3-வது ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று நள்ளிரவு முதல் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 

நேற்று சனிக்கிழமை மாலை நேரத்தில் மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பரபரப்பாக வாங்கிச்சென்றனர்.
Tags:    

Similar News