உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மனை வரன்முறை-பொதுமக்கள் ஆர்வம்

Published On 2022-01-23 05:53 GMT   |   Update On 2022-01-23 05:53 GMT
வரன்முறைப்படுத்தப்படாத மனையிடங்களால் உள்ளாட்சி அமைப்புக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளுடன் 4 மண்டலங்களின் கீழ் இயங்கி வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் நகரம் என்ற நிலையில் நகரில் ஏராளமான மனைப்பிரிவுகள், வீட்டு மனைகள் நாளுக்கு நாள் புதிதாக ஏற்பட்டு வருகிறது. ஏராளமான மனைப்பிரிவுகள் உரிய அங்கீகாரம் இன்றி அமைக்கப்பட்டு விற்பனை செய்து வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. 

இதனால் உரிய அடிப்படை வசதிகள் செய்தல் மற்றும் வங்கி கடன் உதவி பெறுதல் ஆகியவற்றுக்கு வழியில்லாத நிலை உள்ளது.

மேலும் வரன்முறைப்படுத்தப்படாத மனையிடங்களால் உள்ளாட்சி அமைப்புக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மனையிடங்கள், மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்  நடைபெற்றது. 

முதல் மண்டலத்தில் வேலம்பாளையம் அலுவலகம், 2வது மண்டலத்தில் நஞ்சப்பா நகர் அலுவலகம், 3-வது மண்டலத்தில் நல்லூர் அலுவலகம், 4வது மண்டலத்தில் எஸ்.ஆர்., நகர் விநாயகர் கோவில் வளாகம் ஆகியவற்றில் இதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மனைகள் வரன்முறைப்படுத்த விண்ணப்பம் அளித்து கட்டணம் செலுத்தினர். 

மண்டல வாரியாக பொறியியல் பிரிவு மற்றும் வருவாய் பிரிவு ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags:    

Similar News