தலையில் பலத்த காயமடைந்த திவ்யமணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
விபத்தில் பூசாரி - ரியல் எஸ்டேட் உரிமையாளர் உயிரிழப்பு
பதிவு: ஜனவரி 22, 2022 16:05 IST
கோப்புபடம்
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணசாமி மகன் திவ்ய மணிகண்டன்(வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. கோவை - திருச்சி மெயின் ரோட்டில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பால் வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த திவ்யமணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலையில் அருகேயுள்ள அய்யலு மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர் ( வயது 47). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் இருசக்கர வாகனத்தில் ஏரிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இவர் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ரவிசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சையளித்தனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :