உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

Published On 2022-01-22 09:49 GMT   |   Update On 2022-01-22 09:49 GMT
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
நெல்லை:

நெல்லையில் இன்று புதிதாக 717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதியில் மட்டும் 296 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதவிர ராதாபுரத்தில் 90 பேருக்கும், வள்ளியூரில் 82 பேருக்கும், நாங்குநேரியில் 66 பேருக்கும், அம்பையில் 64 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த சில நாட்களாக அம்பை, ராதாபுரம், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 வரை இருந்தது. தற்போது அங்கு சற்று குறைந்துள்ளது. 

அதே நேரத்தில் மாநகர பகுதியில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த வண்ணமாகவே உள்ளது. 

இன்றைய பாதிப்பில் களக்காட்டு மற்றும் மானூரில் தலா 22 பேருக்கும், சேரன்மகாதேவியில் 20 பேருக்கும், பாப்பாக்குடியில் 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாளை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கேன்டீனில் 5 போலீசாருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கேண்டீன் 5 நாட்களுக்கு மூடப்பட்டது. 

இதனைதொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ்காரர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நேற்று 32 பேருக்கு பரிசோதனை செய்ததில் மேலும் 10 போலீசாருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 153 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். இதில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் இறந்தவர்கள் மற்ற விதமான இணை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இறந்து விட்டதாகவும் மருத்துவத்துறை டாக்டர்கள் தெரிவித்தனர். 

அதேசமயம் சிகிச்சையின் போது அவர்களுக்கு எடுக்கப்பட்ட
பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News