உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் இன்று 2-வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு

Published On 2022-01-22 09:17 GMT   |   Update On 2022-01-22 09:17 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
நெல்லை:

 நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலங்களில் வெளிநாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கதிற்காக நீர்நிலைகளில் தங்கும்.

அந்த வகையில் நெல்லையில் கூந்தங்குளம், நயினார்குளம், வடக்கு கழுவூர், தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் செட்டிகுளம் உள்ளிட்ட குளங்களுக்கும் ஏராளமான பறவைகள் வரும்.

இவற்றின் வாழ்விடங்களான நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம், நெல்லை வனத்துறை உள்ளிட்டவை இணைந்து பறவைகளை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.  

அதன்படி 12-வது தாமிரபரணி பறவைகள் கணக் கெடுப்பு நேற்று தொடங்கியது.  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 60 குளங்களில் கணக்கெடுப்பு பணி நடந்தது.

இன்றும் 2-வது நாளாக பறவைகளின் எச்சங்கள், கால் தடங்களை கொண்டு கணக்கெடுக்கும் பணி தொடர்ந்தது. 

இந்த பணியில் 90 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது. 

Tags:    

Similar News