உள்ளூர் செய்திகள்
அமமுக

மொழிப்போர் தியாகிகளுக்கு 25-ந்தேதி வீரவணக்கம் செலுத்துவோம்- அ.ம.மு.க. அறிவிப்பு

Update: 2022-01-22 09:14 GMT
உடலையும் உயிரையும் அன்னைத் தமிழ்மொழிக்காக தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம் என்று அ.ம.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை:

அ.ம.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உடலையும் உயிரையும் அன்னைத் தமிழ்மொழிக்காக தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம். அன்றைய தினம் ஊர்கள்தோறும் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கிடுவோம்.

மாணவர் அணி நிர்வாகிகள் அந்தந்த பகுதியிலுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலத்திற்கேற்ற வகையில் தமிழின் வளர்ச்சியை ஊக்குவித்திடவும் பாடுபட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதியேற்றிடுவோம்.

இந்நிகழ்வுகள் அனைத்திலும் கொரோனா விதிகளை பின்பற்றிடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News