சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு விருதை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு விருது
பதிவு: ஜனவரி 22, 2022 14:22 IST
கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
கும்பகோணம்:
கும்பகோணம் கோட்டம், உத்தமதாணி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை, சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த
3 முன்னோடி விவசாயிகளுக்கு விருதுகளையும், சிறந்த முறையில் பசுங்கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
இதில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கணேசன்,
வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கே.பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன், கும்பகோணம் கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் கண்ணன்.
கால்நடை மருத்துவர்கள் கணேஷ்பாபு, பிரகாஷ், மகேந்திரன்,
முருகானந்தம், புகழேந்தி, ஒன்றிய தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுதாகர், சுரேஷ், பேரூர் செயலாளர் வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட பிரதிநிதி நேரு, உத்தமதாணி ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :