உள்ளூர் செய்திகள்
சேதப்படுத்தப்பட்ட முனியாண்டவர் சிலை

முனியாண்டவர் சிலை சேதம்

Update: 2022-01-22 08:37 GMT
திருக்காட்டுப்பள்ளியில் முனியாண்டவர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி ஆற்றின் கரையில் ஆலமரத்தின் அடியில் சிறிய அளவிலான சூடாமணி முனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். 

இந்த நிலையில் இரவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முனிஆண்டவர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டு இருந்ததை பார்த்தும் அங்கிருந்த 
இரும்பு வேல்கம்பு பிடுங்கப்பட்டு சிலையில் போடப்பட்டிருந்த மாலைகள் வீசப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக திருக்காட்டுப்பள்ளி போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்தியவர்கள் யார்? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். 

தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News