உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பலசரக்கு கடை ஊழியர் தற்கொலை

Update: 2022-01-21 11:31 GMT
அவனியாபுரத்தில் பலசரக்கு கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவனியாபுரம்

அவனியாபுரம் இந்தியன் பேங்க் எதிரே உள்ள பலசரக்கு கடையில் வேலை செய்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மணமேல்குடி தாலுகாவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வம் (21) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கடையின் உரிமையாளர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இத்ரிஸ் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வம்  எங்களது பலசரக்கு கடையில் வேலை செய்து வந்தார். கடையின் மேலே உள்ள அறையில் நானும் செல்வமும் தங்கியிருந்தோம். இரவு 11 மணி அளவில் நான் நன்றாக தூங்கிவிட்டேன். பின்னர் காலை 5 மணி அளவில் எழுந்து பார்க்கும்போது செல்வத்தை காணவில்லை.

மேலும் வேலையின் காரணமாக வெங்காய மார்க்கெட்டிற்கு சென்று விட்டேன். பின்னர் 6.30 மணி அளவில் கடைக்கு வந்த நான் செல்வத்தைத் தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. அவனுடைய தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து பார்த்த போது மொட்டை மாடியில் உள்ள கழிப்பறைக்குள் சத்தம் கேட்டது. கதவு  இடுக்கில் எட்டிப் பார்த்தபோது உள்புறமாக தாழ்ப்பாள் போட்டு தூக்கில் தொங்கியவாறு செல்வம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தேன்.

செல்வம் அடிக்கடி அதிக நேரம் செல்போனில் பேசியவாறே இருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. செல்வம் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News