தஞ்சையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
பதிவு: ஜனவரி 21, 2022 15:43 IST
இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்:
மதம் மாற கூறி வற்புறுத்தியதால் தான் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணத்துக்கு நீதி வேண்டும், நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என கூறி தஞ்சை ரெயிலடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில இளைஞரணி செயலாளர் கார்த்தி, மாவட்ட பொது
செயலாளர் சுகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை செயலாளர் சிவகேசன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :