உள்ளூர் செய்திகள்
வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஆன்லைன் வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்-வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

Published On 2022-01-21 10:10 GMT   |   Update On 2022-01-21 10:10 GMT
ஆன்லைன் வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தில் வலியுறுத்துகின்றனர்.
நெல்லை:

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் டவுனில் நடைபெற்றது. சங்க தலைவர் முகம்மது யூசுப் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார்.  

கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதால் வணிகர்களும், பொதுமக்களும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் ஒழித்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். 

வணிகர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் தங்கள் பகுதிகளை வணிகர்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து கொள்ள வேண்டும். 

ஆன்லைன் மூலம் வணிகம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

எனவே ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். நெல்லையில் உள்ள அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News