உள்ளூர் செய்திகள்
கிரேன் மூலம் தேர் சக்கரம் இடம் மாற்றப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட செங்கோட்டை கோவில் தேர் சக்கரங்கள் இடமாற்றம்-பக்தர்கள் மகிழ்ச்சி

Update: 2022-01-21 09:55 GMT
செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவில் தேர் சக்கரங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. அதனை கோவில் நிர்வாகம் சார்பில் அப்புறப்படுத்தினர்.
செங்கோட்டை:

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று குலசேகரநாத சுவாமி கோவிலாகும். இக்கோவிலின் கூடுதல் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும்.

 இதற்காக கோவில் அருகாமையில் கீழரதவீதியில் சுவாமி- அம்பாளுக்கு தனித்தனி தேர்கள் மற்றும் கோரதம் (சின்னதேர்) என மூன்று தேர்கள் மூலம் திருத்தேர் வடம் பிடித்தல் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருவது வழக்கம்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தகர செட்டுகள் அமைத்து மழை வெயில் காலங்களிலிருந்து 3 தேர்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்சுவாமி தேரின் 4 சக்கரங்கள் தேய்ந்தும் பழுதானதால் பழமையும் பெருமையும் பாரம்பரிய மிக்க தேரின் சக்கரங்களை மாற்றி புதிதாக இரும்பு சக்கரங்கள் அமைத்து தர வேண்டும் என கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் அறநிலை துறை அமைச்சர் செந்தூர் பாண்டியனிடம் பொதுமக்களும், பக்தர்களும் முறையிட்டனர். 

அமைச்சரின் தீவிர முயற்சியால் சுமார் ரூ. 4 லட்சம் செலவில் மரத் தேர் சக்கரங்கள் அகற்றப்பட்டு புதிதாக 4 இரும்பு சக்கரங்கள் மாற்றப்பட்டு பழைய சக்கரங்கள் கோவில் அருகாமையில் வைக்கப்பட்டன.

 இந்நிலையில் பழைய தேரின் சக்கரங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்த நிலையில் இருந்தது. இதனால் பக்தர்கள் வேதனையடைந்த நிலையில் கோவில் நிர்வாகத்திடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். 

இதன் ஒருபகுதியாக நடப்பாண்டில் கிரேன் உதவியுடன் அந்த சக்கரங்களும் பாதுகாப்பான இடத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாற்றப்பட்டதால் பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News