உள்ளூர் செய்திகள்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று காலை முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகர் ரூ.500 அப

3-ம் அலையில் புதிய உச்சம்-நெல்லையில் புதிதாக 806 பேருக்கு கொரோனா

Update: 2022-01-21 09:53 GMT
நெல்லை மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலையில் இதுவரை இல்லாத அளவில் இன்று 806 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க அரசு விதித்துள்ள விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப் பட்டு வருகிறது.

எனினும் கடந்த 1 வாரமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3-ம் அலையின் புதிய உச்சமாக இன்று மாவட்டத்தில் 806 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

மாநகராட்சி பகுதியில் அதிகபட்சமாக 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் வள்ளியூரில் 129 பேருக்கும், ராதாபுரத்தில் 75 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி என மாவட்டம் முழுவதும் தொற்றால் 806 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 7 டாக்டர்களும், 20 நர்சுகளும், மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் 2 மாணவர்களும் அடங்குவர். 

இதேபோல் பாளை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் தொற்று உறுதியானது.

வடக்கன்குளம், ரெட்டியார்பட்டி, முனைஞ்சிபட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் 7 டாக்டர்களுக்கும், 6 செவிலியர்களுக்கும் தொற்று உறுதியானது. 

தற்போது கொரோனா 3-ம் அலையால் பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் லேசான அறிகுறியே காணப்படுகிறது. இதனால் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இன்று 2-வது நாளாக நெல்லை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் முககவசம் இன்றி வந்தவரகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 

இதேபோல் மாவட்ட சோதனை சாவடிகளிலும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிலருக்கு தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மாநகராட்சி சார்பில் வணிக நிறுவனங்கள் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றபடுவதை கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அப்போது சமூக இடை வெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களுக்கும், கடையின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு முககவசம் இன்றி செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News