உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்- கலெக்டர் தகவல்

Update: 2022-01-21 09:39 GMT
தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு கொரோனாதொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. 

மேலும் தற்போது புதியவகை ஒமைக்ரான் கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள் ளவும் 15 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடவேண்டிய பொதுமக்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவு பெற்றவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும்.

தங்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News