உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் 324 பேருக்கு கொரோனா

Published On 2022-01-21 08:02 GMT   |   Update On 2022-01-21 08:02 GMT
தேனி மாவட்டத்தில் டாக்டர்கள் செவிலியர்கள் உள்பட 324 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி:

தேனி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், பெரியகுளத்தை சேர்ந்த டாக்டர், தனியார் மருத்துவமனை டாக்டர் 7பேர், 16 செவிலியர்கள் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

இதுதவிர பெரியகுளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 17 பேருக்கும் கொரோனா தொற்-று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஒரே நாளில் 374 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் மொத்தம் 2036 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளிலும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று கண்டறியப்பட்டவர்களில் 127 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி அல்லிநகரம் பகுதியில் 15க்கும் மேற்பட்ட கடைகாரர்களுக்கு கொரோனா விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் மாவட்டம் முழுவதிலும் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News