உள்ளூர் செய்திகள்
.

சேலம் மாவட்டத்தில் 42.38 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2022-01-21 07:58 GMT
சேலம் மாவட்டத்தில் இது வரை 42.38 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சேலம்:

தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலை  வேகமாக பரவி வருகிறது.  சேலம் மாவட்டத்தில்  நேற்று  ஒரே நாளில் கொரோனா  தொற்று 937 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் சேலம் மாநகராட்சியில் மட்டும் 505 பேர் அடங்குவர். இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

ஆனாலும் அதையும் மீறி கொரோனா வேகமாக பரவி வருகிறது.  அதன் தொடர்ச்சியாக  சேலம் மாவட்டத்தில்   தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  பொது   மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.   

 15 வயதிற்கு மேற்பட்ட 25 லட்சத்து 70 ஆயிரத்து 70 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 68 ஆயிரத்து 534 பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி  88 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 57 சதவீதம்  பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.  

இது தவிர  மாவட்டத்தில்  பூஸ்டர் தடுப்பூசியையும் சுமார் 10   ஆயிரம் போட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இந்த பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனா  தடுப்பூசி போட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும்   உயிரிழப்பு குறைவதால் அனைவரும் தடுப்பூசி  போட்டு கொள்ள வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்றும்  அதிகாரிகள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News