உள்ளூர் செய்திகள்
.

சேலம் அருகே தோட்டத்தில் மாடு மேய்க்க விடப்பட்ட 8 வயது சிறுமி மீட்பு

Published On 2022-01-21 07:49 GMT   |   Update On 2022-01-21 07:49 GMT
சேலம் அருகே தோட்டத்தில் மாடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 8 வயது சிறுமி மீட்கப்பட்டார்
சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டி உத்தமசோழபுரம் அருகில் உள்ள மலங்காடு என்ற கிராமம் உள்ளது. இங்கு செல்வராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் 8 வயது  சிறுமி மாடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சேலம் சைல்டு லைன் அமைப்பிற்கு புகார் வந்தது.

இதை தொடர்ந்து  சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)  முத்து உத்தரவின்பேரில் சேலம் 2-ம் வட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் மேற்கண்ட மலங்காடு  செல்வராஜ் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

அப் போது  சிறுமி மாடு மேய்த்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டார். பின்பு அந்த சிறுமி சேலம் தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த ஆய்வுக் குழுவில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், வாசுகி, இளையராஜா, அருண்குமார், சைல்டு லைன் களப்பணியாளர்கள், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட களப்பணியாளர்கள், மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News