உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

க.பரமத்திக்கு காவிரி குடிநீர்

Published On 2022-01-21 07:26 GMT   |   Update On 2022-01-21 07:26 GMT
க.பரமத்திக்கு காவிரி குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்:

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியக் குழுக் கூட் டம் அக்கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் க.பரமத்தியில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.வி.பழனிசாமி, ஆர்.முகமது அனிபா, கே.குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பவித்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டியலின குடியிருப்பு பகுதிகளில் கூட்டுக் குடும்பங்களாக வசிக்கும் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு  இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம்   முறையீடு செய்து விண்ணப்பித்துள்ள னர். இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த் துறைக்கு மாவட்ட  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உரிய காலத்தில்    இவர்களுக்கு வீட்டுமனை, பட்டா கிடைத்திட மாவட்ட நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும்.

மேலும், காவிரி குடி நீரின்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் காவிரி  குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னதாராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டாம்புதூர், கடைவீதி, மாரியம்மன் கோவில் வீதி, குடியிருப்புப் பகுதிகளில் வெளியேறும் சாக்கடை கழிவுநீர் அருகிலுள்ள வாய்க்கால் நீரில் கலக்கிறது. 

இதனால் இப்பகுதி ஆழ் குழாய் குடிநீர் பாதிக்கப்படுவதுடன் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாக்கடை நீரை வெளியேற்றுவதற்கு உரிய  நடவடிக்கை  மேற்கொள்ள  வேண்டும் என தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News