உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பூஸ்டர் தடுப்பூசி விவரங்களை அறிய தொலைபேசி எண் அறிவிப்பு

Published On 2022-01-21 04:34 GMT   |   Update On 2022-01-21 04:34 GMT
கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிக கொரோனா பராமரிப்பு மையம் மற்றும் உடல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் சிறப்பு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுபற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் 0421 2240852 என்ற தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போடும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிக கொரோனா பராமரிப்பு மையம் மற்றும் உடல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சந்திர காவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, விஜயாபுரம் சமுதாயக்கூடம், பலவஞ்சிப்பாளையம் சமுதாயக்கூடம் ஆகியவற்றில் உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளன. 

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, சேவாசமிதி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News