உள்ளூர் செய்திகள்
கண்காட்சியை பார்வையிடும் பொதுமக்கள்.

கொரோனா விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி

Update: 2022-01-20 10:52 GMT
பொதுமக்களுக்கு கொரோனா, டெங்கு தடுப்பு வழிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
திருப்பூர்:

தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் கொரோனா, டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. 

அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா, டெங்கு தடுப்பு வழிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News