செங்கோட்டை கதிரவன் காலனியை சேர்ந்த பெண், கோவிலுக்கு சென்ற இடத்தில் பாம்பு கடித்து பலியானார்.
செங்கோட்டையில் பாம்பு கடித்து பெண் பலி
பதிவு: ஜனவரி 20, 2022 14:10 IST
கோப்புப்படம்
நெல்லை:
செங்கோட்டை கதிரவன் காலனியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி செல்வகுமாரி(வயது 39).
இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மாடன் கோவிலுக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது.
மயங்கி விழுந்த அவரை, அவரது குடும்பத்தினர் மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.