நலிவடைந்து வரும் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பதிவு: ஜனவரி 19, 2022 16:21 IST
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
பல்லடம்:
பல்லடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு டி.ஒய்.எப்.ஐ. சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல்.லில் 4 ஜி, 5 ஜி சேவையை அமல்படுத்த வேண்டும்.
மற்ற தனியார் நிறுவனங்களில் அந்த சேவைகள் செயல்படுத்தி வரும் நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மட்டும் காலம் தாழ்த்தி வருவதை கண்டிப்பது, நலிவடைந்து வரும் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் அந்த சங்கத்தின் ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :